என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண் கடத்தல்"
தேனி:
தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விவசாய தேவைக்காக மண்எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனை பயன்படுத்தி சிலர் அனுமதியின்றி வேறு தேவைகளுக்கு மண் கடத்தி வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் காளவாசல் உள்ளிட்டவைகளுக்கு மர்மகும்பல் மண் கடத்தி வருகிறது. போலீசார் இவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் கடத்தலை தடுக்கமுடியவில்லை.
சப்-இன்ஸபெக்டர் பவுன்ராஜ் தலைமையில் கோம்பை போலீசார் கருவேலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேற்குபகுதியில் உள்ள ஓடையில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது ஓடையில் மணல் திருடியது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் தீபன்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் வள்ளி புரத்துக் கும், காவேட்டிப் பட்டிக்கும் இடையே சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப் படுவதாகவும், அதில் உள்ள மண் அனுமதியின்றி வெட்டி எடுக்கப் படுவதாகவும், தனிநபர் சிலருக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் இப்பணி நடைபெறுவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நாமக்கல்-பரமத்தி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது புகார் குறித்து முறையாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகளுக்கு அனுமதி பெற்று வண்டல் மண் மற்றும் ஓடை மண் எடுத்து வருகின்றனர். சமீப காலமாக விவசாய பணிக்கு அந்த மண்ணை பயன்படுத்தாமல் செங்கல் சூளைக்கு சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மட்டுமின்றி ஓடைகளில் இருந்து மண் அள்ளிச் செல்லும் லாரி மற்றும் டிராக்டர்கள் கிராமங்களில் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண் அள்ளிச் சென்ற லாரி மின்னல் வேகத்தில் சென்று பள்ளி வாகனம் மீது மோதியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதை தடுக்கவும், அசுரவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
பழனி:
பழனி-கொடைக்கானல் ரோட்டில் உள்ளது அய்யம்புள்ளி குளம். இக்குளத்தில் கடந்த 26-ந் தேதியன்று நள்ளிரவில் 4 டிராக்டர்களில் அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டு இருந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததை அடுத்து பழனி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் மணி, வருவாய் அலுவலர் பிரபு சிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரைக் கண்டடிராக்டர் டிரைவர்கள் டிராக்டரை வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிச் சென்று சம்பவ இடத்தில் 2 டிராக்டர்களையும் 27-ந் தேதி ஒரு டிராக்டரும் பிடித்தனர். ஒரு டிராக்டர் மட்டும் பிடிபடவில்லை.
மண் ஏற்றி சென்ற டிராக்டர் பாலசமுத்திரம் பகுதியில் மருது என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. டிராக்டரை வருவாய்த்துறையினர் கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பழனி நகர் பகுதியில் உள்ள குளங்களில் இதுபோன்று தொடர்ந்து மண் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. எனவே இதன் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழனி:
பழனி அருகே உள்ள அய்யம்புள்ளி குளத்தில் நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் பிரசன்னா, வருவாய் ஆய்வாளர் பிரபு சிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது குளத்தில் 4 டிராக்டர்களில் மண் எடுக்கப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் வருவதைக் கண்ட டிராக்டர் டிரைவர்கள் ஏற்றிய மண்ணுடன் விரைவாக தப்பிச் செல்ல முயன்றனர். இதில் 2 டிராக்டர்களை சம்பவ இடத்திலே வருவாய்த்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்ற 2 டிராக்டர்களில் மண் எடுத்து தப்பிச் சென்று விட்டனர்.
பிடிபட்ட 2 டிராக்டர்கள் பழனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் விசாரணை நடத்தியதில் மற்றொரு டிராக்டரையும் வருவாய்த்துறையினர் பிடித்தனர். மேலும் மண் அள்ளிச்சென்ற ஒரு டிராக்டரை தேடி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி அருகே டிராக்டரில் மண் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையில் போலீசார் அய்யனார் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வைகை ஆற்றுப்படுகையில் சிலர் டிராக்டரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்னமனூர் ஒத்தத் தெருவைச் சேர்ந்த பசும்பொன்பாண்டி, குட்டமுத்து, முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், மாரியப்பன் என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்